மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு
04-Feb-2025
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் சாலையில், டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதன் அருகே களியனுார் செல்லும் சாலையில், நேற்று மதியம் 2:00 மணியளவில், 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அவ்வழியே செல்வோரை கத்தியை காட்டி அச்சுறுத்துவதாக, காஞ்சி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த நபரை பிடிக்க முயற்சி செய்தனர். அங்கிருந்தவர்கள், அந்த நபரை மடக்கி பிடித்து சரமாரியாக அடிக்க துவங்கினர். அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். போலீசாரின் விசாரணையில், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரிந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
04-Feb-2025