உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் அரசு கல்லூரியில் மாணவ -- மாணவியர் சேர்க்கை

உத்திரமேரூர் அரசு கல்லூரியில் மாணவ -- மாணவியர் சேர்க்கை

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடப்பாண்டிற்கான மாணவ - மாணவியர் சேர்க்கை துவங்கியது.இது குறித்து கல்லூரி முதல்வர் சுகுமாரன் கூறியதாவது:டாக்டர்.எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பாண்டிற்கான மாணவ - மாணவியர் சேர்க்கை துவங்கி உள்ளது. இங்கு, இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவர் சேர்க்கை, வரும் 27ம் தேதி வரை நடக்க உள்ளது.அதில், பி.ஏ., - தமிழ், ஆங்கிலம், பி.எஸ்சி., - இளம் அறிவியல் கணிதம், கணினி அறிவியல், பி.காம்., - வணிகவியல் ஆகிய பாடங்களுக்கு மாணவ - மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது.ஆன்லைனில் விண்ணப்பிக்கும் மாணவ - மாணவியர், www.tngasa.inஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலாத மாணவ - மாணவியர் தங்கள் மாற்று சான்றிதழ், பிளஸ் 1 மற்றும் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் 5 நகல்கள், 5 போட்டோ ஆகியவற்றுடன் கல்லூரிக்கு நேரில் வர வேண்டும்.மேலும், இந்த கல்வியாண்டில் புதிதாக இளம் அறிவியல் தாவரவியல், இளங்கலை பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகள் புதிதாக துவக்கப்பட உள்ளது.மேலும், விபரங்களுக்கு கல்லூரி வளாகத்தில் உள்ள உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை