33 ஆண்டுகளுக்குப்பின் மாணவ-மாணவியர் சந்திப்பு
திருப்புட்குழி:திருப்புட்குழி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1992ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவ-மாணவியர் சந்திப்பு கூட்டம் 33 ஆண்டுகளுக்குப்பின் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1992ம் ஆண்டு 10ம் வகுபபு பயின்ற முன்னாள் மாணவ-மாணவியர் சந்திப்பு கூட்டம் 33 ஆண்டுகளுக்குப்பின் நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், பள்ளி பருவத்தில் ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களையும், தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களையும் நினைவு கூர்ந்தனர்.. தாங்கள் 10ம் வகுப்பு பயின்றபோது அமர்ந்த அதே வகுப்பறை இருக்கையில் அமர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில், ஒரே வகுப்பில் பயின்ற. இரு மாணவ -மாணவியர் திருமணம் செய்து கொண்டு, தற்போது தம்பதியராய் பங்கேற்று பிற மாணவ-மாணவியரை உற்சாகப்படுத்தினர் இதில், முன்னாள் மாணவ- மாணவியர் சார்பில், பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, 10, பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொது தேர்வில், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதற்கு தேவைவயான நடவடிக்கையை மேற்கொள்வது, பள்ளிக்கு தேவையான உபகரணங்களை வழங்க முடிவு செய்யப்பட்டது. சந்திப்பின் நினைவாக அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த முன்னாள் மாணவர் யுவராஜ் நன்றி கூறினார்.