உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாற்றுத்திறனாளி மாணவர்கள் உதவி பெற விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளி மாணவர்கள் உதவி பெற விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பெற்று வரும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி மாணவர்களும் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்வி பயின்று வரும் மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை பெற வரும் 15க்குள் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இ - -சேவை மையத்தில் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி