உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஸ் வாகனத்தில் திடீர் புகை ஸ்ரீபெரும்புதுாரில் பரபரப்பு

காஸ் வாகனத்தில் திடீர் புகை ஸ்ரீபெரும்புதுாரில் பரபரப்பு

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து காஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக, 'டாடா ஏஸ்' வாகனம் காஞ்சிபுரம் நோக்கி சென்றது. குன்றத்துார் -- ஸ்ரீபெரும்புதுார் -- ஒரகடம் சந்திப்பில் வந்த போது, வாகனத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதையடுத்து, ஓட்டுனர் வாகனத்தை சாலையோரம் நிறுத்தினார்.தொடர்ந்து வெளியேறிய கரும்புகையால், அப்பகுதி முழுதும் புகை மண்டலமாக மாறியது. காஸ் சிலிண்டர்கள் இருந்ததால், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள், விபத்து ஏற்படும் அச்சத்தில் சாலையில் வாகனத்தை நிறுத்தினர்.அதன்பின், சிறிது நேரத்தில் வாகனத்தில் இருந்து வெளியேறிய கரும்புகை தானாக நின்றது. இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் ஓட்டுனரிடம் விசாரித்து வருகின்றனர்.திடீரென நெடுஞ்சாலை நடுவே காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த வாகனத்தில் கரும்புகை வெளியேறியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை