ஸ்ரீபெரும்புதுாரில் தமிழ் கனவு நிகழ்ச்சி
ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுாரில் தமிழ் கனவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் வெங்கடேஷ்வரா பொறியியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லுாரி மாணவ -- மாணவியருக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நுாலும், தமிழ் பெருமிதம் குறித்த குறிப்பேடும் வழங்கப்பட்டன. உயர்கல்வி, வேலைவாய்ப்பு, வங்கி கடனுதவி, தொழில் வாய்ப்பு முதலியவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ள உதவும் வகையில், பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து, பத்மஸ்ரீ முனைவர் நர்த்தகி நடராஜ், 'கலை வண்ணம்' என்ற தலைப்பில் மாணவ - மாணவியரிடையே உரையாற்றினார்.