உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தண்டையார்பேட்டையில் பஸ் மோதி டீ மாஸ்டர் பலி-

தண்டையார்பேட்டையில் பஸ் மோதி டீ மாஸ்டர் பலி-

சென்னை : தண்டையார்பேட்டை, கும்மாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன், 42; டீ மாஸ்டர். இவர், வேலை முடிந்து, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, எழும்பூரில் இருந்து எண்ணுார் நோக்கி வந்த தடம் எண்: '28' மாநகர பேருந்து, கணேசன் மீது மோதியது.இதில் நிலைதடுமாறி விழுந்தவரின் மீது சக்கரங்கள் ஏறி இறங்கியதில், இடுப்பு, தொடை பகுதியில் பலத்த காயமடைந்தார்.அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில், அவர் இறந்தது தெரிய வந்தது.தண்டையார்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து, கும்மிடிப்பூண்டி, நெல்வாயல் சாவடியைச் சேர்ந்த ஓட்டுனர் சம்பத்திடம், 48, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ