/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 100 ஆண்டை கடந்த விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் இடிப்பு புதிய கட்டட கட்டுமானப் பணி விரைவில் துவக்கம்
100 ஆண்டை கடந்த விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் இடிப்பு புதிய கட்டட கட்டுமானப் பணி விரைவில் துவக்கம்
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம், டி.கே.நம்பி தெருவில், 1920ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில், 1930ம் ஆண்டு முதல், விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையம் செயல்பட்டு வந்தது.பழமையான கட்டடம் என்பதாலும், போதுமான இடவசதி இல்லாததாலும், விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்திற்கு போதுமான உட்கட்டமைப்பு வசதிகளுடன், புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, கடந்த மாதம் 22ம் தேதி, விஷ்ணு காஞ்சி காவல் நிலையம், பழைய தாலுகா காவல் நிலைய கட்டடத்திற்கு தற்காலிமாக இடமாற்றம் செய்யப்பட்டது.இதையடுத்து, புதிய போலீஸ் நிலைய கட்டடம் கட்டுமானப் பணிக்காக, நுாற்றாண்டை கடந்த பழமையான விஷ்ணு காஞ்சி காவல் நிலைய கட்டடம் இடிக்கும் பணி நடந்து வருகிறது.இப்பணி முடிந்ததும, புதிய கட்டடம் கட்டுமானப் பணி விரைவில் துவங்க உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.