உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரூ.59 கோடியில் கட்டிய பாலம் சேதம் திறந்து இரண்டே ஆண்டுகளில் அவலம்

ரூ.59 கோடியில் கட்டிய பாலம் சேதம் திறந்து இரண்டே ஆண்டுகளில் அவலம்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் நகரை சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையுடன், பொன்னேரிக்கரை சாலை இணைக்கிறது. காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அமைந்துள்ள இந்த சாலையின் குறுக்கே ரயில் பாதை இருப்பதால், ரயில் போக்குவரத்து காரணமாக, ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.இதைத் தொடர்ந்து, 2017ல், 59 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் துவக்கப்பட்டு, 2022ல் முடிக்கப்பட்டது. 927.33 மீட்டர் நீளம் கொண்ட இப்பாலத்தில், சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.பாலம் திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், பாலத்தின் இடையே பல விபத்துகள் நடைபெற்று வருகின்றன. இதனால், வேகத்தடை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், பாலத்தின் சிமென்ட் சாலை ஆங்காங்கே உடைந்து வருகிறது. பாலம் திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், தரமற்ற சாலையால், பல இடங்களில் உடைந்து காணப்படுகின்றன.ஏற்கனவே பல விபத்துகள் நடக்கும் நிலையில், உடைந்து வரும் சாலையால், மேலும் விபத்து ஏற்படும் நிலை உருவாகிறது. நெடுஞ்சாலைத் துறையினர், உடைந்த பகுதிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ