மேலும் செய்திகள்
13 ஊராட்சிகளில் நாளை கிராம சபை
12-Dec-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில், பள்ளி சுற்றுசுவர், சிறுபாலங்கள், குளம் வெட்டுதல், மரம் நடுதல், நாற்றாங்கல் பண்ணை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விதமான வேலைகள் செய்யப்படுகின்றன. நிறைவு பெற்ற பணிகளை கண்காணிக்க, மத்திய அரசு ஆய்வுக்குழுவினர் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகின்றனர். ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தேர்வு செய்த சில ஊராட்சிகளை பார்வையிட உள்ளனர் என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.
12-Dec-2024