மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு
19-Sep-2024
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சியில், சுகாதார பிரிவின் கீழ், நிரந்தர துப்புரவு பணியாளர்கள் 100 பேரும், ஒப்பந்த அடிப்படையில் 400 பேரும் பணியாற்றி வருகின்றனர்.ஒப்பந்த பணியாளர் களுக்கு மாத சம்பளமும் சரிவர வழங்காததால், ஒவ்வொரு மாதமும் துப்புரவு பணியாளர்கள் மறியல் செய்வதும், பணி புறக்கணிப்பு செய்வதும் தொடர்கிறது.ஜூலை மாதத்திற்கான சம்பளம் தரவில்லை என, கடந்த ஆக., 14ல், நெல்லுக்கார தெருவில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாரிகள் சமாதானம் செய்ததால், பணிக்கு திரும்பினர். அதையடுத்து, ஒரு சில நாட்களில் சம்பளம் வழங்கப்பட்டது.இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்கான சம்பளம் தரப்படவில்லை என, காஞ்சிபுரம் அண்ணா அரங்கம் எதிரே ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர். சிவகாஞ்சிபோலீசார் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர் அருள்நம்பி உள்ளிட்டோர், துப்புரவு பணியாளர்களுடன் பேச்சு நடத்தினர்.ஒன்றிரண்டு நாட்களில் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் உறுதியளித்த பின், போராட்டத்தை கைவிட்டு பணிக்குதிரும்பினர்.
19-Sep-2024