| ADDED : பிப் 02, 2024 11:50 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு சம்மந்தமூர்த்தி நகர் பூங்கா பின்பக்கம், அதியமான் நகருக்கு செல்லும் சாலையோரம், இரட்டை கால்வாய் செல்கிறது.வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இச்சாலையோரம் கால்வாய் உள்ளது. இக்கால்வாய் தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது. இந்நிலையில், கால்வாயை ஒட்டியுள்ள பகுதியில் புல், செடி, கொடிகளை மேய்வதற்காக, சில நாட்களுக்கு முன், இப்பகுதிக்கு வந்த எருமை கன்று ஒன்று, கால்வாயில் தவறி விழுந்து இறந்துள்ளது.இறந்து கிடக்கும் எருமை கன்று சடலத்தை மாநகராட்சி நிர்வாகம் அகற்றாததால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அப்பகுயில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.மேலும், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, கால்வாயில் தவறி விழும் அபாய நிலை உள்ளது.எனவே, கால்வாயில் இறந்து கிடக்கும் எருமை கன்று சடலத்தை அகற்றுவதோடு, அப்பகுதியில் விபத்தை தடுக்கும் வகையில், கால்வாய்க்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.