மேலும் செய்திகள்
கோவில் சொத்தை விற்றவருக்கு அதே இடத்தில் பணி!
23-Oct-2025
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், எட்டாம் ஆண்டு தெப்போத்சவ விழா, வரும் 19ம் தேதி துவங்குகிறது. காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள தெப்பகுளத்தில், ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் தெப்போத்சவம், தொடர்ந்து மூன்று நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி, எட்டாம் ஆண்டு தெப்போத்சவம் வரும் 19ம் தேதி துவங்குகிறது. தொடர்ந்து மூன்று நாட்களும் மாலை 6:00 மணிக்கு, சுந்தராம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் கச்சபேஸ்வரர் தெப்பத்தில் எழுந்தருளி உலா வர உள்ளார். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் திவ்யா உட்பட பலர் செய்து வருகின்றனர்.
23-Oct-2025