உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஒசூரில் வக்கீல் வெட்டப்பட்ட விவகாரம் காஞ்சியில் பணி புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

ஒசூரில் வக்கீல் வெட்டப்பட்ட விவகாரம் காஞ்சியில் பணி புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் கண்ணன் என்ற வழக்கறிஞர், நேற்று முன்தினம் வெட்டப்பட்டார். நீதிமன்றம் அருகிலேயே வழக்கறிஞர் வெட்டி கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனால், தமிழகம் முழுதும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து, வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காஞ்சிபுரத்திலும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து, அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் நின்று, ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தில் வழக்கறிஞர்கள் தொடர்ந்து தாக்குதல்களுக்கு ஆளாக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினர். ஒசூரில் வழக்கறிஞர் வெட்டப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அந்த சம்பவத்தை கண்டித்தும், காஞ்சிபுரம் வழக்கறிஞர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.சங்கத்திற்கு இடவசதியில்லைகாஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில், 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நீதிமன்ற கட்டடத்தில், குற்றவியல் நீதிமன்றம் இயங்கி வந்தது. இந்த கட்டடத்தில், வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு இட வசதி இருந்துள்ளது.இந்நிலையில், நீதிமன்ற கட்டடம் கடந்தாண்டு சீரமைக்கப்பட்டது. சீரமைத்த பின், அங்கு மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.அங்கு வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு இடவசதி இல்லை என வழக்கறிஞர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், நீதிமன்ற வளாகத்திலேயே, வழக்கறிஞர்கள் பலரும் தரையில் அமர்ந்து, நேற்று பணி புறக்கணிப்பு செய்து தர்ணா போராட்டம் துவக்கியுள்ளனர்.தங்களுக்கு நீதிமன்ற கட்டடத்தில் இடவசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து தர்ணா போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை