மேலும் செய்திகள்
திருமுக்கூடல் சாலையில் பள்ளம் சீரமைக்க கோரிக்கை
23-Oct-2025
பரந்துார்: பள்ளூர் - சோகண்டி சாலை, குண்டும் குழியுமாக இருப்பதால், சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளூர் - சோகண்டி வரையில், மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், 24 கி.மீ., ஒரு வழி சாலை உள்ளது. இந்த சாலை, 44 கோடி ரூபாய் செலவில், ஏழு மீட்டர் சாலையில் இருந்து, 10.5 மீட்டராக விரிவுபடுத்தப்பட்டு, வாகனப் போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது. சமீபத்தில் பெய்த மழைக்கு, பரந்துார், ஏகனாபுரம், நெல்வாய் கூட்டுசாலை ஆகிய பகுதிகளில், ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, பள்ளூர் - சோகண்டி சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23-Oct-2025