| ADDED : ஜன 29, 2024 04:34 AM
சென்னை, : புளியந்தோப்பு, நரசிம்ம நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ், 40. இவர், புதுப்பேட்டை பேருந்து பணிமனையில் நிரந்தர மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம், திரு.வி.க.நகர் 3வது தெருவில் உள்ள திரு.வி.க. தொகுதி மக்கள் நலச்சங்கம் எனும் விளையாட்டு பயிற்சி மையத்தில் கேரம் போர்டு விளையாடி கொண்டிருந்தார்.அப்போது, மது போதையில் அங்கு வந்த புளியந்தோப்பு, திரு.வி.க.நகரைச் சேர்ந்த பழைய குற்றவாளி முகமது ஹுசைன், 37, என்பவர் ராஜேஷ் பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை எடுத்தார். அவர் தடுத்த போது, கையில் வைத்திருந்த கத்தியால் ராஜேஷின் வலது காதை வெட்டி தப்பினார்.ரத்த வெள்ளத்தில் இருந்த ராஜேைஷ, அங்கிருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.