மேலும் செய்திகள்
வறண்டு கிடக்கும் வாசீஸ்வரர் கோவில் குளம்
14-May-2025
காஞ்சிபுரம், ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுச்சுழல் துறையினரின் கலந்தாய்வு கூட்டம் நேற்று காஞ்சிபுரத்தில் நடந்தது.இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு, காஞ்சிபுரம் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பசுமை ஆர்வலரும், தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவருமான அஜய்குமார், மருத்துவர் ஹிரிபிரசாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.சுற்றுச்சூழல் துறை அலுவலர் சார்பில் விதை பந்துகள் வினியோகிக்கப்பட்டது.பசுமை ஆர்வலர் அஜய்குமார் பேசியதாவது:நாம் எதிர்கொள்ளும் சவாலில், கால நிலை மாற்றம் முக்கியமானதாகும். இயற்கையானலும், மனிதர்களானாலும் சமநிலைக்கு வருவதில் தான் சிக்கலாக உள்ளது. இதை சரி செய்து விட்டால் போதும். இயற்கையானாலும், வாழ்க்கையானலும் வளமைபடுத்திவிடலாம்.பாறைகள் நிறைந்த நிலத்தில் குறுங்காடு அமைக்க திட்டமிட்டோம். செடிகளை நட்டு தண்ணீர் ஊற்றிய பின், மரங்களை பாதுகாப்பது நமது கடமை என, எடுத்துரைத்த பின் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று காட்டை வளமைபடுத்தியுள்ளனர். இது எதிர்கால சந்ததியினருக்கு பசுமை போர்வை உருவாக்கியுள்ளோம்.எனவே, இயற்கையானாலும், வாழ்க்கையானலும் சமநிலை படுத்தினால் வளமைபடுத்தி விடலாம்.இவ்வாறு அவர் பேசினார்.
14-May-2025