உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழைநீர் செல்ல வழியில்லாததால் குளமாக மாறிய சர்வீஸ் சாலை

மழைநீர் செல்ல வழியில்லாததால் குளமாக மாறிய சர்வீஸ் சாலை

ஸ்ரீபெரும்புதுார்:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார் -- மீஞ்சூர் வெளிவட்ட சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, காஞ்சிபுரம் -- பாலுார் உள்ளிட்ட சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக, வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை உள்ளது.இந்த சாலை வழியாக காஞ்சிபுரம், வேலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதுதவிர, ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலைகளின் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், இச்சாலை வழியாகவே சென்று வருகின்றனர்.இந்நிலையில், சாலை போதிய பராமரிப்பு இல்லாததால் படுமோசமான நிலையில் உள்ளது. மேலும், சாலையோரம் மண் குவியல் அதிகமாக உள்ளது. மீடியன் பகுதியில் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது.மேலும், நெடுஞ்சாலையில் மழைநீர் வடிய கால்வாய் இல்லாததால், சிறு மழைக்கே மழைநீர் சர்வீஸ் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால், ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, சாலையும் சேதடைந்து வருகிறது.நேற்று முன்தினம் பெய்த மழையில், வண்டலுார் -- வாலாஜாபாத் சர்வீஸ் சாலையில் மழைநீர் தேங்கியதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு சென்றனர்.எனவே, சாலையை முறையாக பராமரிக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை