உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிமென்ட் கல் நடைபாதை மண் சாலையாக மாறிய அவலம்

சிமென்ட் கல் நடைபாதை மண் சாலையாக மாறிய அவலம்

குருவிமலை:காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில், குருவிமலை கிராமம் உள்ளது. இங்குள்ள சாலையோரம், சிமென்ட் கல் பதிக்கப்பட்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை வழியாக கட்டுமானப் பணிக்கு, எம்.சாண்ட் மணல், ஜல்லி கற்கள் ஏற்றிச் சென்ற கனரக வாகனங்களால், சிமென்ட் கற்கள் உடைந்து நடைபாதை சேதடைந்து மண் சாலையாக மாறியுள்ளது.இதனால், இரவுநேரத்தில், இச்சாலையில்செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது மண் குவியலில் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், குருவிமலையில் சேதமடைந்த சிமென்ட் கல் நடைபாதையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கைஎழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை