உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வீட்டு கழிவுநீர் வெளியேற வழியில்லை கால்வாய் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

வீட்டு கழிவுநீர் வெளியேற வழியில்லை கால்வாய் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

காஞ்சிபுரம்,:புத்தேரி ஊராட்சி, கன்னியப்பன் தெருவில், வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேற வழி இல்லாததால், மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குளிக்கிறோம் எனவே, எங்கள் பகுதியில் கழிவுநீர், மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி, கன்னியப்பன் தெருவில், 70க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேற வடிகால்வாய் வசதி இல்லாததால், ஹிந்து சமய அறநிலையத் துறை கோவிலுக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத காலி இடத்தில் வீட்டு உபயோக கழிவுநீரை விட்டு வந்தனர்.இந்நிலையில், கோவிலுக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்தவர், அப்பகுதியில் வீட்டு கழிவுநீர் விட தடை விதித்து, குழாய்கள் மீது மண் கொட்டி அடைப்பு ஏற்படுத்தி உள்ளார். இதனால், இப்பகுதியினருக்கு வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேற வழி இல்லாததால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இதுகுறித்து கன்னியப்பன் தெருவினர் கூறியதாவது:வீட்டு உபயோக கழிவுநீர் விடுவதற்கு வழி இல்லாாதால், ஒரு மாதமாக, மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குளிக்க வேண்டியுள்ளது. குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் உறவினர், நண்பர் வீடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியில் ஏற்கெனவே இருந்த மழைநீர் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.இதனால், மழை பெய்தால், வெளியேற வழியின்றி வீட்டிற்குள் மழைநீர் மட்டுமின்றி பாம்பு, பூரான், தவளை உள்ளிட்டவை வீட்டிற்குள் புகுந்து விடுகிறது.எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி ஏற்கனவே இருந்த இடத்தில் வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்லும் வகையில், வடிகால்வாய் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ