உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  உத்திரமேரூர் பெருமாள் கோவிலில் திருப்பாவை நாட்டிய வைபவம்

 உத்திரமேரூர் பெருமாள் கோவிலில் திருப்பாவை நாட்டிய வைபவம்

உத்திரமேரூர்: உத்திரமேரூரில், நடராஜர் நாட்டியாலயா சார்பில், திருப்பாவை நாட்டிய வைபவ நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது. மார்கழி மாதத்தில், பெருமாள் கோவில்களில் சிறப்பு கலை மற்றும் ஆன்மிக நிகழ்வாக, திருப்பாவை பாடல்களை அடிப்படையாக கொண்டு, நாட்டிய வைபவம் நடத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது. இதில், பரத நாட்டிய கலைஞர்கள் திருப்பாவை பாடல்களுக்கு ஏற்ப நடனமாடி, அதன் ஆன்மிகப் பொருளை வெளிப்படுத்துகின்றனர். இந்த பரத நாட்டிய நிகழ்ச்சி, பிரசித்தம் பெற்ற மிகப்பெரிய கோவில்களில் மட்டும் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, உத்திரமேரூரில் ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான, சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பாவை நாட்டிய வைபவ நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், நடராஜர் நாட்டியாலயா நடன கலைஞர்கள் மற்றும் பள்ளி மாணவியர் பங்கேற்று, ஆண்டாள் வேடமிட்டு ஒன்றரை மணி நேரத்திற்கு திருப்பாவையின் ஒவ்வொரு பாசுரத்தையும் நடனமாடி அசத்தினர். இந்த நடன நிகழ்ச்சி ஜாக்கி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் உலக சாதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்ற நடன கலைஞர்கள் மற்றும் மாணவியர் அனைவருக்கும் விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட் டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை