உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை

விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை

காஞ்சிபுரம்:திருக்காலிமேடு செல்வ விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. காஞ்சிபுரம் மாநகராட்சி 22வது வார்டு திருக்காலிமேடு சாலியர் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில், 25வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவின் ஒரு பகுதியாக, நேற்று 108 திருவிளக்கு பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள் குத்து விளக்கேற்றி, மஞ்சள், குங்குமம், மலர்களால் அர்ச்சனை செய்தனர். விநாயகர், காமாட்சியம்மன், துர்க்கை, மஹாலட்சுமி, சரஸ்வதி மற்றும் அவரவர் குல தெய்வத்தை வேண்டி பூஜை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !