உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இடைத்தேர்தல் நடக்காததால் பதவிக்கு காத்திருந்தோர்...ஏமாற்றம் :32 பிரதிநிதிகள் இன்றி உள்ளாட்சி நிர்வாகத்தில் குழப்பம்

இடைத்தேர்தல் நடக்காததால் பதவிக்கு காத்திருந்தோர்...ஏமாற்றம் :32 பிரதிநிதிகள் இன்றி உள்ளாட்சி நிர்வாகத்தில் குழப்பம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 32 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாததால், பதவிகளுக்காக காத்திருந்த அரசியல் பிரமுகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது, உள்ளாட்சி நிர்வாகத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுதும், 2021ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. மாற்றம் செய்யப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிகளுக்கு, அக்., 6ல் முதற்கட்டமாகவும், 9ல் இரண்டாம் கட்டமாகவும் தேர்தல்கள் நடந்து முடிந்தன.காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐந்து ஒன்றியங்களில், 11 மாவட்ட கவுன்சிலர்கள், 98 ஒன்றிய கவுன்சிலர்கள், 273 ஊராட்சி தலைவர்கள், 1,938 வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.அதேபோல, 2022ல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிக்கான தேர்தல் நடத்தப்பட்டு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.மாவட்டத்தின் பல்வேறு உள்ளாட்சி பதவியிடங்களுக்கு, மூன்று ஆண்டுகளாகியும் தேர்தல் நடத்தப்படாத நிலையில், நடப்பாண்டு மே மாதம் தேர்தல் நடத்தப்படும் என, மாநில தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது.ஓட்டுச்சாவடி, வாக்காளர் பட்டியல் தயாரித்தல் பணிகள் நடந்தன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, 32 உள்ளாட்சி பதவியிடங்களுக்கு, 89,326 வாக்காளர்கள் உள்ளனர்.வாக்காளர் பட்டியல் வெளியானதால் மே மாதமே தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என, பலரும் எதிர்பார்த்தனர். தேர்தலில் போட்டியிட விரும்பிய அரசியல் கட்சியினரும் பெரும் எதிர்பார்ப்போடு இருந்தனர். ஆனால், வாக்காளர் பட்டியல் வெளியிட்டு இரு மாதங்களாகியும், தேர்தல் அறிவிக்காதது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.தங்கள் வார்டு பிரச்னைகளை தெரிவிக்க பிரதிநிதிகள் இல்லாதது, நிர்வாக சிக்கலை ஏற்படுத்தும் என, பொதுமக்கள் கூறுகின்றனர்.ஊராட்சி தலைவர் பதவியிடம் காலியானபின், துணை தலைவருக்கு அப்பதவிக்கான அதிகாரம் தற்காலிகமாக வழங்கப்படுகிறது.https://x.com/dinamalarweb/status/1945660085927342269ஊராட்சி தலைவர் பதவியிடம் காலியானபின், துணை தலைவருக்கு அப்பதவிக்கான அதிகாரம் தற்காலிகமாக வழங்கப்படுகிறது.அதேபோல, காலியாக இருக்கும் வார்டு உறுப்பினரின் பணிகளை, அந்தந்த ஊராட்சி நிர்வாகமே கூடுதல் பொறுப்பாக சேர்த்து பார்க்க வேண்டியுள்ளது. இதனால், காலி பதவியிடங்கள் உள்ள ஊராட்சிகளில் பல்வேறு குழப்பம் நீடிக்கிறது.கிராம மக்களின் தேவைகளை அறிந்து, ஊராட்சிகளிடம் கேட்டு பெறவும், மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கவும், ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்களின் பதவிகள் பூர்த்தி செய்வது அவசியம். ஊராட்சிகளின் நிர்வாக நலனுக்காக, விரைந்து தேர்தலை நடத்த வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.''தேர்தல் தொடர்பாக அரசிதழின் வாயிலாக அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தோம். இதுவரை அறிவிப்பு வரவில்லை. அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதால், உள்ளாட்சி பதவிகளுக்கான இட ஒதுக்கீடு மாறலாம்.

மோசமாகும்

நகர்ப்புற உள்ளாட்சிகளில் கவுன்சிலர் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் உள்ளது. அதுவரை, காலி இடங்கள் அப்படியே இருக்குமா என்று தெரியவில்லை. காஞ்சிபுரம் மாநகராட்சியில், 27வது வார்டுக்கு கவுன்சிலர் பதவியிடம் காலியாக உள்ளது. இரண்டு ஆண்டுகள், கவுன்சிலர் இன்றி அந்த வார்டு செயல்பட்டால், அப்பகுதி மக்களின் பிரச்னையை எப்படி தீர்க்க முடியும் என, அப்பகுதி வாக்காளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.இப்போதுள்ள ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் அடுத்தாண்டு அக்டோபர் வரைதான் உள்ளது. அவர்களின் பதவிக்காலம் முடிந்த பின் மொத்தமாக தேர்தல் நடத்த மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டிருக்கலாம்.- ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி

நகர்ப்புற வார்டு மக்களின் நிலை மோசமாகும்

நகர்ப்புற உள்ளாட்சிகளில் கவுன்சிலர் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் உள்ளது. அதுவரை, காலி இடங்கள் அப்படியே இருக்குமா என்று தெரியவில்லை. காஞ்சிபுரம் மாநகராட்சியில், 27வது வார்டுக்கு கவுன்சிலர் பதவியிடம் காலியாக உள்ளது. இரண்டு ஆண்டுகள், கவுன்சிலர் இன்றி அந்த வார்டு செயல்பட்டால், அப்பகுதி மக்களின் பிரச்னையை எப்படி தீர்க்க முடியும் என, அப்பகுதி வாக்காளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !