உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நல்ல வருவாய்க்கு துாதுவளை மூலிகை கீரை

நல்ல வருவாய்க்கு துாதுவளை மூலிகை கீரை

மூ லிகை கீரை சாகுபடியால் நல்ல வருவாய் பெறலாம் என, ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. துாதுவளை மூலிகை கீரை சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புள்ளலுார் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை வி வசாயி ஜெ.சுகுமார் கூறியதாவது: மணல் கலந்த களிமண் நிலத்தில் கீரை, மூலிகை கீரைகள், வேர்க்கடலை, காய்கறி, பழங்கள் ஆகியவற்றை சாகுபடி செய்துள்ளேன். அனைத்து விளை பொருட்களுக்கும், இயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில் துாதுவளை கீரை, முசுமுசுக்கை கீரை, கரிசலாங்கண்ணி உள்ளிட்ட மூலிகை கீரைகளை சாகுபடி செய்துள்ளேன். பிற ரக கீரைகளை காட்டிலும், மூலிகை கீரைகள் சாகுபடி செய்யும் போது, அதிக செலவினங்கள் இல்லை. பருவம் வந்துவி ட்டால், மூலிகை கீரையை அறுவடை செய்து விற்பனை செய்யலாம்; உலர்த்தி பொடியாக்கி வைத்து கொள்ளலாம் . இதை சூப் மற்றும் பொடியாக பயன் படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: - ஜெ.சுகுமார், 96399 54645.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை