உள்ளூர் செய்திகள்

குருவார பிரதோஷம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.குருவார பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று, மாலை 5:00 மணி அளவில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.அதை தொடர்ந்து, அம்பாளுடன் பிரதோஷ மூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அதேபோல, படுநெல்லி சந்திரமவுலீஸ்வரர், விஷகண்டிகுப்பம் சக்தீஸ்வரர், கோவிந்தவாடி கைலாசநாதர் ஆகிய கோவில்களில், குருவார பிரதோஷம் வெகு விமரிசையாக நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி