உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏர்போர்ட் திட்ட அனுமதி விண்ணப்பித்தது டிட்கோ

ஏர்போர்ட் திட்ட அனுமதி விண்ணப்பித்தது டிட்கோ

சென்னை, : சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில் அமைக்கப்பட உள்ளது. இங்கிருந்து, ஆண்டிற்கு 10 கோடி பயணியரை கையாளும் வகையில் திட்டத்தை செயல்படுத்தப்படுகிறது. இதற்கான பணிகளை, 'டிட்கோ' எனும் தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொள்கிறது.இதற்காக இட அனுமதி கேட்டு, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம், 2023ல் டிட்கோ விண்ணப்பித்தது. இதற்கு, சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, கடந்த வாரம் சுற்றுச்சூழல் தாக்க ஆய்வுக்கு அனுமதி அளித்து, மத்திய சுற்றுச்சூழல் துறையும் உத்தரவிட்டது.இதையடுத்து, திட்ட அனுமதி கேட்டு, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம், டிட்கோ நேற்று முன்தினம் விண்ணப்பம் செய்துள்ளது.இதுகுறித்து, தொழில்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விமான நிலைய திட்டத்திற்கு, இட அனுமதி, திட்ட அனுமதி, கட்டுமானம் முடிந்தபின் இயக்கத்திற்கு கொண்டு வருவது என, மூன்று அனுமதிகள் பிரதானம். இதில், இட அனுமதி கிடைத்தாலே திட்டத்திற்கான அனைத்து அனுமதிகளும் சுலபமாக கிடைக்கும். எனவே, திட்ட அனுமதி கிடைத்ததும், கட்டுமானப் பணிகளுக்கு தேவைப்படும் ஆயத்தப் பணிகள் துவங்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை