காஞ்சி வரதர் கோவிலில் இன்று பாலாலயம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 2012ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் ஆன நிலையில், கோவில் ராஜகோபுரங்கள் மற்றும் பல்வேறு சன்னிதிகளை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், முதற்கட்டமாக கோவில் கிழக்கு மற்றும் மேற்கு ராஜகோபுரம், உடையர் சன்னிதி திருப்பணி துவங்க உள்ளதையொட்டி, இன்று, காலை 6:00 மணிக்கு பாலாலயம் நடைபெறுகிறது.இதையொட்டி, இன்று, அதிகாலை 2:30 மணிக்கு திருமஞ்சனம் கொண்டு வரப்பட்டு பெருமாள் திருவாராதனமும், காலை 4:00 மணிக்கு கலாகர்ஷணமும், தொடர்ந்து யாகசாலை, பூர்ணாஹூதி உள்ளிட்டவை நடக்கிறது.காலை 6:00 -- 6:45 மணிக்குள் மணிக்கு பாலாலயமும், 7:00 மணிக்கு சாற்றுமறையும் நடைபெறுகிறது என, கோவில் உதவி ஆணையர், நிர்வாக அறங்காவலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.