காஞ்சிபுரம்:துாய்மை பாரத இயக்கத்தில், துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிக்கு கழிப்பறை கட்டுவதற்காக, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்டமிட்டுள்ளது. இதை கண்காணிக்க ஊராட்சி, ஒன்றியம், மாவட்டம் என மூன்று நிலைக்குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன. காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து வட்டாரங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.கடந்த 2012 - 13ம் ஆண்டு 'நிர்மல் அபியான்' திட்டம், 2014ம் ஆண்டு முதல் துாய்மை பாரத இயக்கம் - 1 மற்றும் 2021 - 22ம் ஆண்டு துாய்மை பாரத இயக்கம் - 2 ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.நிர்மல் பாரத இயக்கத்தில், திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத கிராமமாக மாற்றுவதற்கு, தனிநபர் கழிப்பறை கட்டி தருவது மற்றும் பொது, பள்ளி, சிறிய அளவிலான சுகாதார கழிப்பறைகளை கட்டிக் கொடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.துாய்மை பாரத இயக்கத்தில் மட்கும் மற்றும் மட்காத குப்பை என, தரம் பிரித்து கொடுப்பது மற்றும் தெருக்களை சுத்தமாக வைத்திருப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டன. துாய்மை பாரத இயக்கம் - 2ல், பிளாஸ்டிக் கழிவு மற்றும் கழிவுநீரை மறுசுழற்சிக்கு பயன்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.ஒரு சில இடங்களில் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கழிப்பறைகளை, ஊரக வளர்ச்சித் துறையினர் சீரமைத்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் அரசு துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில், துாய்மை பாரத இயக்கத்தில் புதிய கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட உள்ளன. இதை முறையாக செயல்படுத்துவதற்கு, ஊராட்சி, ஒன்றியம் மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் கட்டுப்பாட்டில் தனிக்குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்பட உள்ளது.குறிப்பாக, 4.37 - 5.30 லட்சம் ரூபாய் மதிப்பில், துவக்கப் பள்ளிக்கும், 5.74 - 6.74 லட்சம் ரூபாய் மதிப்பில் நடுநிலைப் பள்ளிக்கும் பெண்கள் கழிப்பறை கட்டிக் கொடுக்கப்பட உள்ளன.இதுதவிர, 4.25 லட்சம் ரூபாய் மற்றும் 5.25 லட்சம் ரூபாய் மதிப்பில் துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிக்கு ஆண்கள் கழிப்பறை கட்டப்பட உள்ளன.மேலும், துாய்மை பாரத இயக்கம் - 3 விரைவில் துவக்கப்படும். இதை கண்காணிக்க, ஊராட்சி, ஒன்றியம், மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட உள்ளன.
கிராம சுகாதார செவிலியர்.
ஒன்றிய குழுக்கள்: வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார சுகாதார மருத்துவ அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி அலுவலர், வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட ஆறு நபர்கள்.மாவட்ட குழுக்கள்: மாவட்ட கலெக்டர், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர், வாழ்வாதார திட்ட இயக்குனர் உள்ளிட்ட 21 நபர்கள் அடங்கிய குழுவினர்.