மரக்கன்று நடும் விழா
காஞ்சிபுரம்: டாக்டர் கலாம் வழியில் உதவும் கரங்கள் தன்னார்வ அமைப்பு சார்பில், ஸ்ரீபெரும்புதுார் வைரகுளக்கரையில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டாக்டர் கலாம் வழியில் உதவும் கரங்கள் அமைப்பு சார்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலை கரையோரங்களில் மரக்கன்று நடப்பட்டு வருகிறது. அதன்படி ஸ்ரீபெரும்புதுார் வைரகுளக்கரையில் மகுடம், நாவல், வேம்பு, நெல்லி, ஆல், பூவரசு, அரசு என, 77 மரக்கன்றுகள் நடப்பட்டன.