உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பெண்ணிடம் சில்மிஷம் இருவர் கைது

பெண்ணிடம் சில்மிஷம் இருவர் கைது

படப்பை: படப்பையில், தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். படப்பை அடுத்த சாலமங்கலத்தை சேர்ந்த, 28 வயது பெண், மறைமலை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், கடந்த 24ம் தேதி இரவு, பணியை முடித்துவிட்டு, சாலமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, தனது வீட்டிற்கு தனியாக நடந்து சென்றார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், அந்த பெண்ணை தொட்டு சில்மிஷம் செய்து, ஆபாசமாக பேசி தப்பி சென்றனர். பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததையடுத்து, படப்பை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், சில்மிஷம் செய்தது, ஒரகடத்தில் தங்கி, கார் ஓட்டுநராக பணியாற்றும் திருப்பத்துார் பகுதியை சேர்ந்த சக்திவேல், 21, வந்தவாசியை சேர்ந்த ரகு, 32, என்பது தெரிய வந்தது. இருவரையும், போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி