உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கஞ்சா கடத்திய இருவர் கைது

கஞ்சா கடத்திய இருவர் கைது

ஸ்ரீபெரும்புதுார், டிச. 31-ஸ்ரீபெரும்புதுார் போலீசார் நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீபெரும்புதுார் அருகே, காட்டுக்கூட்டு சாலை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, 'ஸ்பிளன்டர்' பைக்கில் வந்த இருவரை மடக்கி விசாரித்தனர்.அவர்கள், முன்னுக்குபின் முரணாக பேசியதை அடுத்து, அவர்களிடம் நடத்தியசோதனையில், 1.250 கிலோ கஞ்சாஇருந்தது தெரிந்தது.இதையடுத்து, 15,000 ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து, ராணிப்பேட்டை மாவட்டம், நகரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், 21, விஷ்ணு, 21,ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை