மேலும் செய்திகள்
சாலை விபத்தில் முதியவர் பலி
16-Jul-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே இரு வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துக்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர். காஞ்சிபுரம் அடுத்த, காலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 51; இவர், நேற்று முன்தினம், 'டி.வி.எஸ்.,' பைக்கில், மதியம் 1:00 மணியளவில், காஞ்சிபுரத்திலிருந்து, உத்திரமேரூர் நோக்கி சென்றார். குருவிமலை பாலாறு பாலம் அருகே சென்றபோது, எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில், தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்தார். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மதியம் 2:00 மணியளவில் இறந்தார். இதுபற்றி, மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதேபோல, ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள மேவளூர்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னன், 39. என்பவர், 'ஹீரோ சூம்' இருசக்கர வாகனத்தில், காஞ்சிபுரம் அருகே காரைப்பேட்டையை கடந்து வேலுார் நோக்கி நேற்று காலை 7:00 மணியளவில் சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத லாரி, பொன்னன் மீது மோதியதில் உயிரிழந்தார். விபத்து தொடர்பாக லாரி மற்றும் லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய லாரி மற்றும் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
16-Jul-2025