உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் இன்று துவக்கம்

உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் இன்று துவக்கம்

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில், 54வது திவ்யதேசமாக விளங்குகிறது. இங்கு, உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி, இடது கால் துாக்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள 22 திவ்யதேசங்களில் தொண்டை நாட்டு திருத்தலங்களில், இத்தலம் கச்சி ஊரகம் என அழைக்கப்படுகிறது. கச்சி என்றால் காஞ்சிபுரம். ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்யதேசங்கள், இந்த ஒரே கோவிலுக்குள் அமைந்துள்ளது.பெருமாளின் 108 திவ்யதேசங்களில் நான்கு திவ்யதேசங்களையும், இந்த ஒரே கோவிலில் தரிசனம் செய்யலாம். பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் பிரம்மோற்சவம் 10 நாட்கள் விமரிசையாக நடக்கும். கடைசியாக 2020ல் நடந்தது.அதன்பின், கொரோனா ஊரடங்கு மற்றும் திருப்பணி நடந்ததால், நான்கு ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடைபெறவில்லை. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் நடந்தது.இந்நிலையில், நடப்பாண்டுக்கான தை மாத பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து காலை, மாலை சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார்.

உற்சவ விபரம்

நாள் காலை உற்சவம் மாலை உற்சவம்பிப்., 2 சப்பரம் ஸிம்ம வாகனம்3 ஹம்ஸ வாகனம் சூர்ய பிரபை4 கருடசேவை ஹனுமந்த வாகனம்5 சேஷ வாகனம் சந்திர பிரபை6 பல்லக்கு யாளி வாகனம்7 சூர்ணாபிஷேகம் யானை வாகனம்8 திருத்தேர் -9 தொட்டி திருமஞ்சனம் குதிரை வாகனம்10 தீர்த்தவாரி புஷ்பகோடி விமானம்11 த்வாதசாராதனம் த்வஜா அவரோகணம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை