உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நிலத்தடியில் குழாய் உடைந்து சாலையில் வீணாகும் குடிநீர்

நிலத்தடியில் குழாய் உடைந்து சாலையில் வீணாகும் குடிநீர்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், புலிவாய் ஊராட்சியில், கன்னிகுளம், மணல்மேடு, புலிவாய், விஜயநகர் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தின் குடிநீர் தேவைக்காக அங்குள்ள ஏரி, குளம் ஆகிய பகுதிகளில் குடிநீர் கிணறு, ஆழ்துளை கிணறு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.இவைகளில் இருந்து குடிநீர் உறிஞ்சப்பட்டு குழாய் வாயிலாக, குடியிருப்புகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், புலிவாய் ஏரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு குடிநீர் எடுத்து செல்லும் குழாய், புத்தளி செல்லும் சாலையோரத்தில் நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ளது.தற்போது, இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருகிறது. உடைந்த குழாயில் இருந்து வெளியேறிவரும் குடிநீரானது, அங்கேயே தேங்கி நிற்கிறது.அவ்வாறு, தேங்கும் குடிநீரில் தொற்றுநோய் பரப்பும் கிருமிகள் உற்பத்தியாகி, அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !