உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலைகளை சீரமைக்க ஒன்றிய கூட்டத்தில் ஆலோசனை

சாலைகளை சீரமைக்க ஒன்றிய கூட்டத்தில் ஆலோசனை

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியக் குழு கூட்டம், வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில், ஒன்றியக் குழு தலைவர் ஹேமலதா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, ஒன்றியக் குழு துணை தலைவர் வசந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பானுமதி, சூர்யா முன்னிலை வகித்தனர்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: ஒன்றியக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கனவு இல்ல வீடுகளை விரைந்து கட்டி முடிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.சேதமடைந்த சாலைகளை கண்டறிந்து மேம்படுத்துவது குறித்து, கோடை மழையால் ஊராட்சிகளில் தேங்கும் மழைநீரில், டெங்கு கொசு உற்பத்தியை தடுப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ