உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏ.டி.எம்.,ல் நுாதன திருட்டு உ.பி., வாலிபர் கைது உ.பி., வாலிபர் கைது

ஏ.டி.எம்.,ல் நுாதன திருட்டு உ.பி., வாலிபர் கைது உ.பி., வாலிபர் கைது

சென்னை:ஏ.டி.எம்., இயந்திரத்தின் பணம் வரும் வழியில் இரும்புத் தகடை வைத்து, வாடிக்கையாளர்கள் எடுக்கும் பணத்தை நுாதன முறையில் திருடிய உத்தர பிரதேச வாலிபர் கைது செய்யப்பட்டார். வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன், 39. தனியார் நிறுவனம் வாயிலாக, ஏ.டி.எம்., மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். முகப்பேர் கிழக்கு பாரிசாலையில் உள்ள எஸ்.பி.ஐ., - ஏ.டி.எம்., மையத்தில், பொதுமக்கள் எடுக்கும் பணம் இயந்திரத்திலேயே சிக்கிக் கொள்வதாக புகார் வந்ததையடுத்து, நேற்று காலை அங்கு சென்று பார்த்தார். அப்போது, ஏ.டி.எம்., இயந்திரத்தில், பணம் வரும் வழியில் இரும்பு தகடு வைக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த சீனிவாசன், அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த வடமாநில வாலிபர்கள் மூன்று பேரை பிடிக்க முயன்றார். அதில் இருவர் தப்பி ஓடிவிட, ஒருவர் பிடிபட்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஜெ.ஜெ., நகர் போலீசார், பிடிபட்ட வாலிபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர், உத்தர பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்த சிவா, 20, என தெரிந்தது. வி சாரணைக்கு பின் போலீசார் கூறிய தாவது: சிவா, தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, ஏ.டி.எம்., இயந்திரத்தின் பணம் வரும் வழியில் இரும்பு தகடை வைத்துவிடுவார். வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் போது, பணம் இயந்திரத்தினுள் சிக்கிக்கொள்ளும். அதன்பின், வாடிக்கையாளர்கள் சென்றதும், இயந்திரத்தில் சிக்கிய பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி விடுவர். அவரிடம் இருந்து, 30 செ.மீ., நீளம் கொண்ட இரும்பு தகடு, 2,000 ரூபாய் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். சிவாவை கைது செய்த ஜெ.ஜெ., நகர் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய சிவாவின் கூட்டாளிகளை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை