உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குட்கா பொருள் விற்பனை அதிகரிப்பு வாரணவாசியில் தடுக்க வலியுறுத்தல்

குட்கா பொருள் விற்பனை அதிகரிப்பு வாரணவாசியில் தடுக்க வலியுறுத்தல்

வாலாஜாபாத், ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை தரக்கூடிய புகையிலைப் பொருட்களுக்கு, அரசு தடை விதித்துள்ளது.இதுகுறித்து, கடைகளில் அப்பொருட்கள் விற்கப் படுகிறதா என, சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து,நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, புகையிலை பொருட்கள் விற்கும் கடை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிந்து, அவற்றை பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கையில், தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.எனினும், இந்த கெடுபிடிகளையும் மீறி, குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள கடைகளில், ரகசியமாக புகையிலை பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது.அதன்படி, வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாரணவாசி பகுதியில் உள்ள சில பெட்டி கடைகளில், ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை தரக்கூடிய புகையிலைப் பொருட்களை மறைமுகமாக விற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.சுற்றி உள்ள பலகிராமங்களுக்கு, வாரணவாசி மைய பகுதியாக உள்ளதால், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள், இங்கு அதிக அளவில் கூடுகின்றனர்.அவர்கள் புகையிலை பொருட்கள் பயன்பாட்டால் பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும், எனவே, வாரணவாசி பகுதி பெட்டி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க, போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !