எல்லையம்மன் கோவில் குளத்தை துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
திருப்பருத்திக்குன்றம்:பாசி படர்ந்துள்ள திருப்பருத்திக்குன்றம் எல்லை யம்மன் கோவில் குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்பருத்திக்குன்றத்தில் எல்லையம்மன் கோவில் உள்ளது. அப்பகுதி நிலத்தடி நீரை அப்பகுதி மக்கள், 40 ஆண்டுகளுக்கு முன் வீட்டு உபயோக தேவைக்கும், கோவில் அபிஷேகத்திற்கும் பயன்படுத்தி வந்தனர். முறையான பராமரிப்பு இல்லாததால், குளத்து நீர் பாசி படர்ந்தும், செடி, கொடிகள் வளர்ந்தும், மண் திட்டுகளால் துார்ந்த நிலையில் உள்ளது. எனவே, எல்லையம்மன் கோவில் குளத்தை துார்வாரி சீரமைக்க, திருப்பருத்திக்குன்றம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.