உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஓராண்டிலேயே சேதமடைந்த கான்கிரீட் சாலை சீரமைக்க வலியுறுத்தல்

ஓராண்டிலேயே சேதமடைந்த கான்கிரீட் சாலை சீரமைக்க வலியுறுத்தல்

உத்திரமேரூர்:திருப்புலிவனத்தில், ஓராண்டிலேயே சேதமடைந்த சன்னிதி தெரு இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, சன்னிதி தெரு இணைப்புச் சாலை நீண்ட நாட்களாக சேதமடைந்து இருந்தது. இதை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதையடுத்து, 2024 --- 25ம் நிதி ஆண்டில், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், 2.2 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. இச்சாலை தரமாக அமைக்காததால் சேதமடைந்து வருகிறது. சாலை அமைத்து ஓராண்டே ஆன நிலையில், ஜல்லிகள் பெயர்ந்து உள்ளன. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, ஊரக வளர்ச்சி துறையினர், திருப்புலிவனத்தில் ஓராண்டிலேயே சேதமடைந்த சன்னிதி தெரு இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை