சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
கீழம்பி:காஞ்சிபுரம் ஒன்றியம், கீழம்பி ஊராட்சி, ஆட்டோ நகரில் இருந்து சிறுகாவேரிபாக்கம், ஆரியபெரும்பாக்கம், திம்மசமுத்திரம், சித்தேரிமேடு செல்லும் சாலை உள்ளது.வாகன போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலையில், ஆட்டோ நகரில், மண் அரிப்பால் சாலை சேதமடைந்து மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது.இதனால், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.எனவே, கீழம்பி ஆட்டோ நகரில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.