மேலும் செய்திகள்
சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
4 hour(s) ago
மின்விளக்கு வசதி இல்லாத கருங்குட்டை சுடுகாடு
4 hour(s) ago
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் காஞ்சியில் விபத்து அபாயம்
4 hour(s) ago
காஞ்சிபுரம் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இம்மருத்துவமனைக்கு புறநோயாளிகள், உள்நோயாளிகள், சிகிச்சை பெறுவோரை பார்க்க வருவோர் என, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், மருத்துவமனை பகுதியில் வேகத்தடை அமைக்கப்படவில்லை.இதனால், மருத்துவமனையில் இருந்து எதிரில் உள்ள பேருந்து நிறுத்தம், டீ கடை, உணவகத்திற்கு சென்று வருவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இச்சாலையில் செல்லும் வாகனங்களால், மருத்துவமனைக்கு சென்று வருவோர் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பாதசாரிகள் விபத்தில் சிக்காமல் சிரமமின்றி சென்று வரும் வகையில், வேகத்தடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago