தாம்பரம்: மாநகர போக்குவரத்து கழக பணிமனை இளநிலை பொறியாளர், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். மகன் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் இருவர் மீது நடவடிக்கை எடுக்கும்வரை, உடலை வாங்கமாட்டோம் என, அவரது குடு ம்பத்தினர் மறுத்துவிட்டனர். கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனுார், ஜவகர் அய்யா நகரைச் சேர்ந்தவர் யுவராஜ், 40; தாம்பரம் மாநகர போக்குவரத்து கழக பணிமனையில், இளநிலை பொறியாளர். இவர், நேற் று முன்தினம் இரவு, காட்டாங்கொளத்துார் - பொத்தேரி இடையே, தாம்பரம் நோக்கி வந்து கொ ண்டிருந்த சோழன் விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தாம்பரம் ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி, தாம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், யுவரா ஜ், தமிழக டி.ஜி.பி.,க்கு மின்னஞ்சல் அனுப்பிய பின், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. அதன் விபரம்: கடந்த ஆகஸ்ட் மாதம், எனக்கு ஏற்பட்ட கழுத்து வலி காரணமாக பணிக்கு செல்லவில்லை. இதன் காரணமாக, பணிமனை உதவி பொறியாளர் கோவிந்தராஜுக்கு மருத்துவ சான்றிதழ்களை அனுப்பி, விடுப்பு கேட்டேன். அவர், விடுப்பை நிராகரித்தார். அதே மருத்துவ சான்றிதழ்களை எச்.ஆர்.டி., சொர்ணலதாவுக்கு அனுப்பினேன். அவரும், என் விடுப்பை நிராகரித்து, 'ஆப்சென்ட்' போட்டுவிட்டார். இதுபோல், கடந்த மூன்று மாதங்களாக எனக்கு பணியும் வழங்காமல், ஊதியமும் தராமல் ஏமாற்றிவிட்டனர். இதனால் , பெரும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டேன். நான் தற்கொலை செய்துகொண்டால், இவர்கள் தான் பொறுப்பு. இதுவே என் மரண வாக்குமூலம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மேலும், தான் இறந்த பின் கிடைக்கும் பணத்தை, தன் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு, நண்பருக்கு 'வாட்ஸாப்'பில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதற்கிடையே, யுவராஜின் குடும்பத்தினர், மகன் தற்கொலைக்கு, மாநகர போக்குவரத்து கழக பணிமனை உதவி பொறியாளர் கோவிந்தராஜ், எச்.ஆர்.டி., சொர்ணலதா ஆகியோர் தான் காரணம். அதற்கான ஆவணங்களை தர தயார். இருவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை, உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி, திரும்பி சென்றுவிட்டனர். ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.