உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் அரசு மகளிர் பள்ளியில் கூடுதல் கழிப்பறை ஏற்படுத்த வலியுறுத்தல்

உத்திரமேரூர் அரசு மகளிர் பள்ளியில் கூடுதல் கழிப்பறை ஏற்படுத்த வலியுறுத்தல்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போதிய கழிப்பறை வசதி இல்லாததால், மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர். கூடுதல் கழிப்பறை கேட்டு பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.உத்திரமேரூரில் உள்ள கேதாரிஸ்வரன் கோவில் தெருவில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, 1,200 மாணவியர் படித்து வருகின்றனர்.இங்கு, மாணவியர் இயற்கை உபாதைகளை கழிக்க, கழிப்பறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள பழைய கட்டடத்தில் ஐந்து கழிப்பறைகளும், புதிய வகுப்பறை கட்டடத்தில் ஐந்து கழிப்பறைகளும் இருந்தது.இதில், பழைய பள்ளி கட்டடம் சேதமடைந்து இருந்ததால், இரு மாதத்திற்கு முன் இடித்து அகற்றப்பட்டது.அப்போது, கட்டடத்தில் இருந்த ஐந்து கழிப்பறைகளும் சேர்த்து இடிக்கப்பட்டன. தற்போது, புதிய கட்டடத்தில் உள்ள ஐந்து கழிப்பறைகள் மட்டுமே இயங்கி வருகிறது.இங்கு, மாணவியர் அதிகமான எண்ணிக்கையில் உள்ளதால், கழிப்பறைகள் போதிய அளவிற்கு இல்லாமல் உள்ளது. இதனால், மாணவியர் இயற்கை உபாதைகளை கழிக்க போதிய வசதி இல்லாமல் உள்ளது.மேலும், பள்ளியில் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதால், கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் தாமதமாகி வருகின்றன. தொடர்ந்து, கழிப்பறைகளில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் அங்கேயே தேங்கும் நிலை உள்ளது. தேங்கும் கழிவுநீரால் அப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது.எனவே, உத்திரமேரூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், கூடுதலாக கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த, துறை அதிகாரிகளுக்கு பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை