உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தம்புரான் ஏரிக்கரை சாலையோரம் தடுப்புகள் அமைக்க வலியுறுத்தல்

தம்புரான் ஏரிக்கரை சாலையோரம் தடுப்புகள் அமைக்க வலியுறுத்தல்

உத்திரமேரூர்,:உத்திரமேரூர் ஒன்றியம், அம்மையப்பநல்லூர் திடீர் நகரில் இருந்து, தம்புரான் ஏரிக்கரை வழியாக களியாம்பூண்டி செல்லும் சாலை உள்ளது.இந்த சாலையை பயன்படுத்தி சுற்றுவட்டார கிராமத்தினர், உத்திரமேரூர், மானாம்பதி, வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.சேதமடைந்து இருந்த இச்சாலை போக்குவரத்துக்கு ஏற்ற சாலையாக இல்லாமல் இருந்தது. இதனால் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன்படி, 2024 -- 25ம் நிதி ஆண்டில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 47.35 லட்சம் செலவில், மூன்று மாதத்திற்கு முன், புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.இந்நிலையில், தம்புரான் ஏரிக்கரை மீது செல்லும், இந்த சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி, சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.இதை தவிர்க்க, தம்புரான் ஏரிக்கரை மீது செல்லும் சாலையின் இருபுறமும், தடுப்புகள் அமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை