உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விடுபட்ட கால்வாய் கட்டுமான பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்

விடுபட்ட கால்வாய் கட்டுமான பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஓரிக்கை செல்லம்மா நகரில், மழைநீர் வடிகால்வாய் விடுபட்ட இடத்தில் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஓரிக்கையில், சாலையின் இருபுறமும், நெடுஞ்சாலைத் துறை சார்பில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில், செல்லம்மா நகரில், சாலையோரத்தில் கால்வாய் கட்டுமான பணிக்கு இடையூறாக புளியமரம் அமைந்துள்ள பகுதியில், ஐந்து மீட்டர் நீளத்திற்கு இணைப்பு ஏற்படுத்தப்படாமல் விடுபட்டுள்ளது. இதனால், கால்வாய் கட்டுமான பணி முழுமை பெறாததால், பலத்த மழை பெய்தால், கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, ஓரிக்கை செல்லம்மா நகரில், விடுபட்ட கால்வாய் கட்டுமான பணியை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து, காஞ்சிபுரம் உபகோட்டம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'காஞ்சிபுரம் ஓரிக்கையில், புளிய மரம் குறுக்கிடும் இடத்தில், வடிகால்வாய் கட்டுமான பணி விடுபட்டுள்ளது. 'இதனால், அரசிடம் இருந்து முறையான அனுமதி பெற்று, புளிய மரத்தை அகற்றியபின், விடுபட்ட வடிகால்வாய் பணி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ