உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கால்நடை குடிநீர் தொட்டிக்கு குழாய் அமைக்க வலியுறுத்தல்

கால்நடை குடிநீர் தொட்டிக்கு குழாய் அமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் ஒன்றியம், களக்காட்டூரில், கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில், ஊராட்சிதுறை சார்பில், கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி குழாயுடன் கட்டப்பட்டது.இந்த குடிநீர் தொட்டி கால்நடைகளுக்கு தாகம் தீர்க்கும் வகையில் இருந்தது.இந்நிலையில், கால்நடை தொட்டிக்கு தண்ணீர் நிரப்ப அமைக்கப்பட்ட குழாய் உடைந்துள்ளதால், தொட்டியில் குடிநீர் நிரப்ப முடியாத சூழல் உள்ளதால், தொட்டி வீணாகி வருகிறது.எனவே, கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில், தொட்டிக்கு குடிநீர் குழாய் அமைக்க, களக்காட்டூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கால்நடை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை