உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அய்யங்கார்குளம் கிரிவல பாதையில் மின்விளக்கு ஏற்படுத்த வலியுறுத்தல்

அய்யங்கார்குளம் கிரிவல பாதையில் மின்விளக்கு ஏற்படுத்த வலியுறுத்தல்

அய்யங்கார்குளம்: அய்யங்கார்குளம் சஞ்சீவிராயர் கோவில் குளக்கரை கிரிவல பாதையில், மின்விளக்கு ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் அடுத்த, அய்யங்கார்குளத்தில் சஞ்சீவிராயர் கோவில் பின்புறம் தாதசமுத்திரம் என அழைக்கப்படும் சஞ்சீவிராயர் குளம் உள்ளது. கடந்த 2012, ஏப்ரல் மாதம் முதல், ஒவ்வொரு பவுர்ணமிதோறும், சஞ்சீவிராயர் குளக்கரையை சுற்றி திரளான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். பக்தர்கள் கிரிவலம் வரும் பாதையில் மின்விளக்கு வசதி இல்லை. எனவே, கிரிவலம் நடைபெறும் சஞ்சீவிராயர் கோவில் குளக்கரை முழுதும் தெரு மின்விளக்கு வசதி ஏற்படுத்த, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை