மழைநீர் வடிகால்வாய் தளத்தை சீரமைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் தாமரைபள்ளம் தெருவில், சேதமடைந்த மழைநீர் வடிகால்வாய் தளத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி, இரண்டாவது வார்டு , தாமரை பள்ளம் தெருவில், கான்கிரீட் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாய் தளம் மூன்று இடங்களில் உடைந்த நிலையில் உள்ளது. இதனால், இச்சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் பாதசாரிகள், சேதமடைந்த மழைநீர் வடிகால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், தாமரை பள்ளம் தெருவில், சேதமடைந்த கான்கிரீட் மழைநீர் வடிகால்வாய் தளத்தை சீர மைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பாத சாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.