மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் --- முசரவாக்கம் சாலை, புத்தேரி ஊராட்சி, பாக்குபேட்டை பிரதான சாலையோரம் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் செல்லும் கால்வாய் உள்ளது.இது மண் கால்வாயாக இருப்பதாலும், முறையான பராமரிப்பு இல்லாததாலும், கால்வாயில் செடி, கொடிகள் புதர்போல் வளர்ந்துள்ளதால், கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் துார்ந்த நிலையில் உள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காஞ்சிபுரத்தில் பலத்த மழை பெய்தால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.எனவே, கால்வாயை முழுமையாக துார்வாரி, கான்கிரீட் கால்வாயாக கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.