நத்தாநல்லுாரில் பயன்பாடற்ற கட்டடத்தை அகற்ற வலியுறுத்தல்
வாலாஜாபாத்,:நத்தாநல்லுாரில், விஷ ஜந்துக்கள் வசிப்பிடமாக மாறிய பயன்பாடற்ற பழைய பள்ளி கட்டடத்தை அகற்ற மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.வாலாஜாபாத் ஒன்றியம், நத்தாநல்லுார் கிராமத்தில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டடத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வந்தது. இப்பள்ளி கட்டடம் பழுதடைந்து வகுப்பறையில் மழைநீர் சொட்டும் நிலை ஏற்பட்டது.இதையடுத்து, அப்பள்ளி கைவிடப்பட்டு அருகாமையில் புதிய கட்டடம் ஏற்படுத்தப்பட்டு தற்போது அங்கு தொடக்கப் பள்ளி செயல்படுகிறது.பயன்பாடின்றி கைவிடப்பட்ட பழைய பள்ளி கட்டடம் பராமரிப்பின்றி உள்ளதால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.கட்டடத்தை சுற்றி பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.எனவே, நத்தாநல்லுார் கிராம மக்கள், கைவிடப்பட்ட பழைய பள்ளி கட்டடத்தை சுற்றி சுகாதாரமாக வைத்திருப்பதோடு, அக்கட்டடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.